சஹஜ யோகம் 1970இல், அன்னை ஸ்ரீமாதாஜி ஸ்ரீ நிர்மலா தேவி அவர்களால் தரப்பட்ட ஒரு எளிமையான தியான முறை ஆகும். இதனால் அனைத்து மனிதர்களிடமும் இருக்கின்ற தெய்வீக சக்தியான குண்டலினியை எழுப்பி விழிப்புநிலை பெறச்செய்து அதன் மூலம், நம்மையும் இவ்வுலகையும் படைத்துக் காக்கின்ற பரமசக்தியுடன் இணைய வழி செய்கிறது. இந்த பழமையான யோக முறையில் விஞ்ஞான பூர்வமான அணுகுமுறை உள்ளதால், தினசரி இதைப் பயில்வது நமது அன்றாட வாழ்வில் முழுமையான சமநிலையை ஏற்படுத்தித் தருகிறது.
நமக்குள் இருக்கும் இறைசக்தி மேலே எழும்பும் போது, நமது உடலில் உள்ள சக்கரங்கள் எனப்படும் சக்திமையங்களுக்கு ஊட்டமளித்து பராமரிக்கின்றது. சஹஜ யோக தியானத்தின் வாயிலாக இந்த சக்தி விழிப்பு நிலை அடையும் போது, நமக்கு உடலிலும், மனதிலும் உணர்விலும், ஆன்மீகத்திலும் முன்னேற்றம் ஏற்படுவதால், நல்ல ஆரோக்கியமான பலன்களைத் தருகின்றது. இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டு இருப்பதால், உலகின் பல நாடுகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிறிய எளிமையான வழிகளில் சஹஜயோகா தியான பயிற்சி அளிக்க படுகிறது. தொடர்ந்து காலையிலும் மாலையிலும் செய்து வரும் போது ஆரோக்கியமான வாழ்க்கையையும் மனஅழுத்தம் அற்ற நிலைமையையும் நமக்கு தந்து உதவுகிறது. உலகின் 140 நாடுகளிலும் அனைத்து இன மக்களும் இதனை பயற்சி செய்து வருகின்றனர்.
ஸ்ரீ மாதாஜி அல்லது அன்னை என அன்பாக அழைக்கப்படும் ஸ்ரீ மாதாஜி நிர்மலா
தேவி, புராண காலத்தின் பல பெரிய புனிதர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளால்
விவரிக்கப்பட்ட பெருமளவிலான(கூட்டாக) ஆத்ம விழிப்புணர்வு” வழங்குதல் முறையை
அளித்த வரலாற்றில் முதல் ஆன்மீக ஆசிரியர் ஆவார். ஸ்ரீ மாதாஜி, மார்ச் 21, 1923
அன்று இந்தியாவின் சிந்துவாராவில் பிறந்தார். 1970ஆம் ஆண்டில் ஸ்ரீ மாதாஜி நிர்மலா
தேவி சஹஜ யோகா தியான முறையை வழங்கினார். அதன்பிறகு, உலகெங்கிலும்
உள்ள மக்களுக்கு ஆத்ம விழிப்புணர்வு வழங்குவதற்காக, அவர் அதிக அளவில் பயணம்
செய்துள்ளார்.
ஸ்ரீ மாதாஜி தனது தன்னலமற்ற பணிக்காகவும், சஹஜ யோகா வழியாக தனது ஆன்மீக
போதனைகளின் சக்திவாய்ந்த முடிவுகளுக்காகவும் பல மதிப்புமிக்க நிறுவனங்களால்
உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். மற்றவைகளுக்கிடையே ஐக்கிய நாடுகளின்
சமாதான பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
பிற வலைத்தளங்கள்:
www.tnmeditation.com
www.sahajayoga.org.in
9566031363 க்கு வாட்ஸ்அப் அனுப்பவும்
மின்னஞ்சல்: contact@SahajaYogaTamil.Com
www.facebook.com/SahajaYogaTamil
https://twitter.com/SahajaYogaTamil
"உள்ளே அமைதியை உணர முடிகிறது. பாசிட்டிவ் எண்ணங்கள் மட்டும் வருகின்றன."
பத்திரிகையாளர், திருவண்ணாமலை
"என் உடம்பு மோசமான நிலையில் இருந்தது இப்போது நன்றாக உள்ளது. என் குடும்பத்தில் சில சச்சரவுகள் இருந்தது. தியானத்திற்கு பிறகு அது சரியாகிவிட்டது."
முதிய பெண்மணி, தேனீ
"முதலில் கணக்கு பாடம் நல்ல வராமல் இருந்தது. தியானத்திற்கு பிறகு கணக்கு பாடம் எளிமையாக படிக்கமுடிஞ்சது."
மாணவர், திண்டிவனம்